Inandoutcinema - Tamil cinema news

உலக சாதனையை சமன் செய்த ரோஹித். உலக சாதனை படைத்த தல தோணி. விவரம் உள்ளே

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்று பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுகிறது. முதலில் நடந்த 20 ஓவர் போட்டிகளில் இரு அணிகளும் ஆளுக்கொரு வெற்றியை பெற்றன. இன்னிலையில் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3 வது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் ஐசன்ராய் 67, பட்லர் 34, ஹேங்ஸ் 30 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்தியஅணி களமிறங்கியது. போட்டி தொடங்கிய 2-வது ஓவரில் ஷிகர் தவான் 5 ரன்களில் வெளியேற, சிறிது நேரத்தில் ராகுல் 19 ரன்களில் ஜேக் பால் பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேற கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மாவுடன் கை கோர்த்தார். இருவரும் இணைந்து இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தடினர். அதிரடியாக அடிக்க ஆசைப்பட்டு கோலி 43 ரன்களில் அவுட் ஆனார்.

பின்னர் இறங்கிய ஹர்திக் பாண்டியா, வந்த வேகத்தில் அதிரடி காட்டினார். இதற்கிடையில் 19 ஓவரில் ரோஹித் சர்மா சதமடித்தார். இது அவரது மூன்றாவது 20 ஓவர் சதமாகும். இறுதியாக ஹர்திக் பாண்டியா சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பேற வைத்தார். ரோஹித் சர்மா அதிக சத்தங்கள் அடித்தவர்கள் பட்டியலில் நியூசிலாந்து வீரர் காலின் முன்றோவுடன் முதலிடத்தை பகிர்துகொண்டுள்ளார்.

மேலும் சர்வதேச 20 போட்டி வரலாற்றில் 50 கேட்ச் பிடித்தவர் என்ற பெருமையை நேற்று தோனிக்கு கிடைத்தது. அதுமட்டுமின்றி அதிக கேட்ச் பிடித்தவர்கள் பட்டியலில் 54 கேட்ச் பிடித்து தோணி முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news