ராக்கெட்ரி நம்பி விளைவு படத்தில், புதிய தோற்றத்தில் வரும் நடிகர் மாதவன் – காணொளி உள்ளே

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. அதைத்தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் மாதவன் நடித்த விக்ரம் வேதா படமும் பெரிய வெற்றியை பெற்றது. அதன் பிறகு மகளிர் மட்டும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் ராகேட்டரி எனும் புதிய படத்தில் நடிகர் மாதவன் நடிக்கிறார்.

அக்ஸர் மற்றும் தில் மாங்கே மோர் போன்ற படங்களை இயக்கிய ஆனந்த மஹாதேவன் இந்த்ப் படத்தை இயக்கியுள்ளார் . இந்தப் படம் தமிழ், இந்தி, ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கடுங்குளிரியல் ஆய்வுத் திட்டங்களில் (cryogenic engine technology) முதன்மையானவராக செயல்பட்டவர். 1994ம் ஆண்டு பாதுகாப்பு ரகசியங்களை உளவுபார்த்ததாக மத்திய புலனாய்வுத்துறை தவறுதலாக இவரை கைது செய்தது.

1998ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அவர் நிரபராதி என்று தீப்பளித்து விடுவித்தது. இந்த வழக்கால் அவர் அடைந்த மன உளைச்சல்களையும், பாதிப்புகளை Ready to fire: How India and I survived the ISRO spy case என்ற புத்தகத்தில் நாராயணன் பதிவுசெய்துள்ளார். இந்த புத்தகத்தை தழுவி இந்தப் படம் உருவாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் என்று பெயரிடப்படுள்ள இந்தப் படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவிவருகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news