Inandoutcinema - Tamil cinema news

மாணவி சோபியாவுக்கு ஜாமின் – தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை சோபியா என்ற ஆராயிச்சி மாணவி அவதூராக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த தமிழிசை சவுந்தரராஜன் அப்பெண்ணிடம் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பி பெண்ணை கைது செய்தனர்.

இந்நிலையில், ஆராயிச்சி மாணவி சோபியா கைது செய்ததற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பு உள்ளது. குறிப்பாக தமிழ் திரையுலகினர் பலரும் தங்களது கண்டனங்களை டிவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.

இயக்குனர் பா.ரஞ்சித் மாணவி சோபியாவுக்கு ஆதரவாக “ஜனநாயகத்தின் குரல் சோபியா” தமிழக அரசே விடுதலை செய்து என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ராஜு முருகன் ஒரு வீடியோவை பதிவிட்டு தனது எதிர்ப்பினை கடுமையாக பதிவு செய்துள்ளார்.

மேலும், தமிழிசைக்கு இயக்குனர் பாரதிராஜா ஆகியோரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மாணவி சோபியாவின் தந்தை அவரைது கைதுக்கு ஜாமின் வழங்க தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

இந்த வழக்கு சற்று முன்பு விசாரனைக்கு வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி மாணவி சோபியாவுக்கு அறிவுரை கூறும்படி பெற்றோருக்கு உத்தரவிட்டு அவருக்கு ஜாமின் வழங்கினார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news