September 25, 2018
Inandoutcinema - Tamil cinema news

சோனம் கபூருடன் பஞ்சாபி பெண்ணாக நடிக்கப்போகும் பிரபல தமிழ் நடிகை.

சென்னையில் வளர்ந்து கண்ட நாள் முதல் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்தான் நடிகை ரெஜினா காசென்ட்ரா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். தற்போது முதல் முறையாக ஹிந்தி படத்தில் நடிக்கவிருக்கிறார். இவர் சமீபத்திய பெட்டியில் தனது ஹிந்தி படத்தை பற்றியும் திரையுலகில் நடக்கும் பாலியல் வன்முறைகளை பற்றியும் கூறியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது : இந்தியில் முதல் முறையா நடிக்கப்போறேன். நினைக்கும்போது இன்னும் ஹாப்பியா இருக்கு. பஞ்சாபி பொண்ணா இந்தப் படத்துல நடிக்கிறேன். என்கூட சேர்ந்து சோனம் கபூரும் நடிக்கிறாங்க. என் கேரக்டர் பெயர், குகூ. சோனம் கபூரும், நானும் எப்படி ஃபிரெண்ட்ஸ் ஆவோம்ங்கிற கான்செஃப்ட் படத்துல ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். படத்தோட பெயரே எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. அனில் கபூருடைய ஒரு பாடல் வரியான ‘ஏக் லடிக்கி கோ தேகா தோ ஹைசா லகா’தான் படத்தோட டைட்டில். அந்தப் பாட்டைத்தான் இப்போ அடிக்கடி பாடிக்கிட்டு இருக்கேன். பாலியல் தொல்லை சினிமாவுல இருக்கு. அதுக்காக நான் ரொம்ப வருத்தப்படுறேன். நடிகைகள் லைம் லைட்ல இருக்கிறதுனாலதான், சினிமாவுல இருக்கிற பிரச்னைகள் வெளியே தெரியுது. சிலர் வாய்ப்புக்காக அட்வான்டேஜ் எடுத்துக்கிறாங்க. அந்தச் சூழலை நடிகைகளான நாமதான் தைரியமா ஃபேஸ் பண்ணனும். நடக்குற விஷயத்தை வெளியே சொல்லத் தயங்கக் கூடாது. அதை தைரியமா எதிர்க்கணும். வாய்ப்புக்காக எதையும் பண்ணனும்னு அவசியமில்லை என நடிகை ரெஜினா காசென்ட்ரா கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news