எனது படம் குறித்த தவறான தகவல்களை வெளியிட வேண்டாம் – இயக்குனர் வேண்டுகோள்

சென்னை: முண்டாசுப்பட்டி, ராட்சன் படங்களை தொடந்து நடிகர் தனுஷை வைத்து ராம்குமார் இயக்கும் புதியப்படத்தில் லட்சுமிமேனன் கதாநாயகியாக நடிக்கிறார் என்று வெளியான தகவலுக்கு இயக்குனர் ராம்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய கும்கி படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். இவர் இதுவரை 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் பள்ளிப்படிப்பை முடிக்க வேண்டிய கட்டாயம், தொடந்து இவர் நடித்த படங்கள் சரியாக போகாதது உள்ளிட்ட சில காரணங்களால் படங்களில் கமிட் ஆகாம் இருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் ராட்சன் இயக்குனர் ராம்குமார் அடுத்து தனுஷை வைத்து புதிய படம் இயக்கப்போவதாக தகவல் வெளியானது. மேலும், இந்த படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனால், இந்த தகவலை இயக்குனர் ராம்குமார் மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: ‘வணக்கம். ராட்சசனுக்கு பிறகு தனுஷ் அவர்களுடனான திரைப்படத்திற்கு திரைக்கதை அமைக்கும் பணியே இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறோம். அதற்க்குள்ளாகவே கதை நாயகி குறித்தான இது போன்ற தவறான தகவல்களை யாரும் வெளியிட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன். நன்றி’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கூடவே பத்திரிகையில் வெளியான செய்தியையும் பகிர்ந்துள்ளார்.

இதற்கிடையில் தனுசுக்கு ஜோடியாக நடிக்க வைக்க அவரது ரசிகர்கள் மேகா ஆகாஷ், ஸ்ரீதிவ்யா, சமந்தா, நயன்தாரா போன்றோரை பரிந்துரை செய்துள்ளனர். ஆனால் லட்சுமி மேனன் மட்டும் வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news