மாடர்ன் உடையில் ரம்யா பாண்டியன் – வைரலாகும் புகைப்படங்கள்

ராஜூ முருகன் இயக்கத்தில் தேசியவிருது வாங்கிய ‘ஜோக்கர்’, சமுத்திரக்கனி நடித்த ‘ஆண் தேவதை’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர், ரம்யா பாண்டியன். இவர், கடந்தாண்டு தன் வீட்டு மொட்டைமாடியில் எடுத்த போட்டோ ஷூட் பரபரப்பானது. `ஆண் தேவதை’ படத்திற்குப் பிறகு, வேறு எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்த இவருக்கு, இந்த போட்டோ ஷூட் பல வாய்ப்புகளை வாங்கி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர் கமிட் ஆகியுள்ள படங்களின் படப்பிடிப்பு தொடங்க சில மாதங்கள் ஆகும் என்பதால், இவர் தற்போது சமையல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதனை டுவிட்டர், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது மாடர்ன் உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news