இணையத்தில் வைரலாக பரவும் பேட்ட படத்தின் புதிய புகைப்படம் – விவரம் உள்ளே

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன் உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர். இந்நிலையில், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை மாளவிகா மோகனன், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே அவரின் முதல் கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் முடிந்தது, அதை தொடர்ந்து ஐரோப்பாவிலும் படப்பிடிப்பு நடத்தினர். சமீபத்தில் இந்த படத்தின் முதல் புகைப்படம் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலாக பரவியது. சில நாட்கள் முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதனால் இந்த படத்தை பற்றிய தகவல்கள் ஏதும் வெளியாகாமல் இருந்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்னிலையில் பேட்ட படத்தின் புதிய புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் நடிகர் ரஜினி சிம்ரனுடன் பூத்தொட்டி வைத்துக்கொண்டு நடப்பதுபோல் உள்ளது. பேட்ட படத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news