September 24, 2018
Inandoutcinema - Tamil cinema news

அரசியல் லாபத்திற்க்காக இரட்டை வேடம் போடும் ரஜினி – விவரம் உள்ளே

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதி கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் காவேரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி அகால மரணமடைந்தார்.

அதை தொடர்ந்து அவரின் உடல் முழு அரசு மரியாதையுடன், மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில், திமுக தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் திரை பிரபலங்கள் என ஏராளமானோர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்னிலையில் கலைஞருக்காக நேற்று நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் முன்னணி திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். இன்னிலையில் இந்த விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார். அந்த விழாவில் அவர் பேசியதாவது : கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. அதிமுக ஆண்டு விழாவின்போது எம்ஜிஆர் படத்தின் அருகே கருணாநிதியின் படத்தையும் வைக்க வேண்டும்.

rajini

ஏனென்றால் அதிமுக உருவாக காரணமாக இருந்தவர் கருணாநிதி. கருணாநிதி இன்றி அரசியல் செய்ய முடியாது என்ற நிலையை உருவாக்கியவர். இதிகாச நாயகர்களை திரையில் கொண்டுவந்து பாமர மக்கள் வரை கொண்டு சேர்த்தவர் கருணாநிதி. மெரினாவில் இடம் வழங்கியதற்கு எதிராக அரசு மேல் முறையீட்டுக்கு போயிருந்தால், நானே களத்தில் இறங்கி போராடியிருப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

கலைஞர் எனக்கு நண்பராக இருந்தார். அவர் கூட நிறைய நாட்கள் செலவழிச்சேன். நிறைய விடயங்கள் அவரிடம் பகிர்ந்துகொண்டேன் என்பதில் மகிழ்ச்சியா இருக்கு. அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டிக்கொள்கிறேன் என நடிகர் ரஜினி கூறியுள்ளார். தற்போது பொது மக்கள் சிலர் ரஜினியை விமர்சித்து வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் ரஜினி எதுக்கெடுத்தாலும் போராட்டம் பண்ணா தமிழ்நாடு சுடுகாடு ஆயிடும் என கூறியிருந்தார். தற்போது அவரே கலைஞருக்காக போராடுவேன் என கூறியதால், ரஜினி ரெட்டை வேடம் போடுகிறார் என சமூக வலைதளத்தில் பொது மக்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news