டிவி சேனல் தொடங்கும் ரஜினி! – லெட்டர் பேடில் வெளியான அறிவிப்பு உண்மையா?

ஜெயலலிதா மாறைவுக்கு பிறகு அரசியல் கட்சி தொடங்கி ஆன்மீக அரசியலில் ஈடுபடப்போவதாக சூப்பர்ஸ்டார் ரஜினி கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அறிவித்தார்.

அதனைதொடர்ந்து ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் கட்சிக்கான நிர்வாகிகள் சேர்க்கும் பணி மாவட்டம் வாரியாக நடந்து வந்தது. இதற்கிடையில், ரஜினி காலா மற்றும் பேட்ட படங்களில் பிசியாக நடித்து கொண்டிருந்தார்.

அந்த படங்கள் முடிந்த பிறகு ரஜினி முழுநேர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், கட்சித்தொடங்கும் முன்பு ரஜினிகாந்த் பெயரில் டிவிச்சேனல் ஒன்று தொடங்கவுள்ளதாக நேற்று ரஜினி மக்கள் மற்றம் சார்பில் அவர் கையெழுத்து இட்டதுபோல் ஒறு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதுக்குறித்து ரஜினி அரசியல் வட்டாரங்கள் கூறுகையில்; விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ள நிலையில் தலைவர் சார்பில் டிவிச்சேனல் ஒன்று தேவைப்படுவது அவசியமாக உள்ளது.

இதற்கான பணிகளில் மன்றத்தின் முதல்நிலை நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தலைவரின் பெயரிலேயே சூப்பர் ஸ்டார் டிவி, ரஜினி டிவி, தலைவர் டிவி போன்ற பெயர்களை பதிவு செய்ய விண்ணப்பிக்கவும், தலைவர் படத்தை பயன்படுத்தவும் தலைவர் அனுமதி வழங்கி உள்ளார்.

இந்த தகவல் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் செய்தியாகி வருகிறது. பேரக் கேட்டாலே சும்மா அதிரிருதுல்ல. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news