ரங்கராஜ் பாண்டே ரஜினி கட்சியில் இணைகிறாரா ? – ரஜினியின் பதில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன் உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர். இந்நிலையில், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை மாளவிகா மோகனன், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பேட்ட படத்தின் படப்பிடிப்புகள் அணைத்தும் முடிந்து விட்டதால் அடுத்தகட்ட பணிகளை படக்குழு மேற்கொண்டுள்ளது. இன்னிலையில் ஒய்வு நேரத்தில் இருந்த ரஜினி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். நடிகர் ரஜினிகாந்த் போயஸ் தோட்டத்தில் உள்ள தனது வீட்டில் வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது  அவர் பத்திரிக்கையாளர்களுக்கு கூறியதாவது : தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும்  என்றால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு பாதிப்பு வராது என்று கூறப்படுவது எந்த அளவிற்கு உண்மை என தெரிந்து கொள்ள வேண்டும். ரிசர்வ் வங்கி விவகாரத்தில் ஆர்பிஐ ஆளுநர் ராஜினாமா பற்றிய உண்மையை தெரியாமல் எதுவும் பேச முடியாது. பேட்ட படம் வெளிவந்த பின்பு அடுத்த படம் குறித்து பார்க்கலாம். தந்தி தொலைக்காட்சியில் பணியாற்றிய ரங்கராஜ் பாண்டே என் கட்சியில் இனைய இருக்கிறார் என்று வந்த தகவல் உண்மையில்லை. அது வெறும் வதந்திதான் என நடிகர் ரஜினி கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news