September 23, 2018
Inandoutcinema - Tamil cinema news

ஆளும்கட்சி எதிர்க்கட்சி மாறிமாறி விமர்சிப்பது அரசியல் உள்நோக்கம் – ரஜினி

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தை 18 கிராம மக்கள் முற்றுகையிட முயன்றனர். அப்போது மக்கள் மீது கோர தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால பலர் பாதிக்கப்பட்டனர். படத்திற்கும் மேற்பட்ட பொது மக்களின் உயிரிழப்பும் நடைபெற்றது.

 

இதற்க்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதை தொடர்ந்து தற்போது ஸ்டெர்லைட் ஆலைக்குத் தடை விதித்து தமிழக அரசு சீல்வைத்தது. மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்காக 2005, 2006, 2009, 2010 ஆம் ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிலங்கள் ரத்து செய்யப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. நிலத்திற்காக ஸ்டெர்லைட் ஆலையிடம் இருந்து பெறப்பட்ட பணம் திருப்பி தரப்படும் என சிப்காட் அறிவித்துள்ளது.

இந்தத் தடைகுறித்து அரசியல் கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பிவந்தாலும், இதன்மூலம் தூத்துக்குடி மக்கள் ஓரளவுக்கு நிம்மதியடைந்துள்ளனர். மேலும், இதனால் தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பிவருகிறது. நடிகர் ரஜினிகாந்த், பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக இன்று தூத்துக்குடி கிளம்பியுள்ளார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

துப்பாக்கிச் சூட்டில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக தூத்துக்குடி செல்கிறேன். ஆறுதல் கூறினால் எனக்கு மகிழ்ச்சி. நடிகரான என்னைப் பார்த்தால், இந்த நெருக்கடியான சூழலில் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என நம்புகிறேன். சட்டப்பேரவை கூட்டத்தொடரை தி.மு.க புறக்கணித்தது பற்றிப் பேச விரும்பவில்லை. தி.மு.க-வை அ.தி.மு.க-வும், அ.தி.மு.க-வை தி.மு.க-வும் விமர்சிப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. எனினும், பழைய சம்பவங்களைப் பேச வேண்டாம்; அதனால் பயனில்லை. துப்பாக்கிச் சூடு குறித்து மனித உரிமை கமிஷன் விசாரித்துவருகிறது. அதில் உண்மை தெரியவரும் என நடிகர் ரஜினி கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news