September 25, 2018
Inandoutcinema - Tamil cinema news

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் பெயரை அறிவித்த சன் பிச்சர்ஸ் – விவரம் உள்ளே

இயக்குனர் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியான காலா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார். காலா படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் 2.0 மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் என 2 படங்கள் உள்ளது. சங்கரின் 2.0 படம் வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என படுக்குழு அறிவித்துள்ளது.

சங்கர் படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்கிறார்.

அனிருத் இசையமைக்கும் முதல் ரஜினி படம் இது. ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என திரை பிரபலங்கள் பலர் நடிக்கிறார்கள்.இதைத் தொடர்ந்து லடாக், ஐரோப்பா ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.

இன்னிலையில் இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர், சில மணித்துளிகள் முன்னதாக இணையத்தில் வெளியிடப்பட்டுஉள்ளது. இந்த படத்தின் தலைப்பு பேட்ட என வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் நடிகர் ரஜினி லிங்கா படத்தில் உள்ள தோற்றம் வருவதாக கறுத்தது தெரிவித்து வருகின்றனர். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news