September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

ரஜினி சர்ச்சைக்கு பிறகு விஜய் சேதுபதி எடுத்த அதிரடி முடிவு. விவரம் உள்ளே

முன்னணி பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர். அவரை பின்பற்றுவோரும் அதிகமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். நடிகர்-நடிகைகள் புகைப்படங்கள் மற்றும் புதிய படங்கள் பற்றிய செய்திகள் மற்றும் சமூக, அரசியல் கருத்துக்களையும் பதிவிடுகிறார்கள். இவற்றில் நடிகர்-நடிகைகள் பெயரில் ஏராளமான போலி கணக்குகளும் உள்ளன. ரசிகர்கள் அவற்றை உண்மை என்று நம்பி பின்தொடர்கிறார்கள்.

இந்த போலி கணக்கில் நடிகர் விஜய் சேதுபதி பெயரும் தற்போது சிக்கி உள்ளது. அவர் பெயரில் நிறைய போலி கணக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து போலிகளை அப்புறப்படுத்த விஜய்சேதுபதியே டுவிட்டரில் புதிய கணக்கு தொடங்கி உள்ளார். அதில் டுவிட்டரில் நான் கூறியதாக நிறைய தவறான தகவல்கள் பரப்பப்பட்டு உள்ளன. அந்த கருத்துக்கள் என்னுடைய பெயரில் இயங்கும் போலிகளின் செயல் என்று தெரிவித்துக்கொள்கிறேன் என் பதிவிட்டு உள்ளார். இந்த போலி கணக்கில் இருந்து ரஜினியை ஆதரித்து கருத்து கூறியது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news