ரசிகர்களுக்கு ரஜினி கொடுத்த அதிர்ச்சி…

தான் கட்சி தொடங்குவது உறுதி என்று அறிவித்திருந்த ரஜினி படங்களில் நடித்தவாறே அரசியல் செயல்பாடுகளையும் கவனித்து வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் தனது மாவட்ட நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டம் நடத்தினர்

இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை லீலா பேலஸில் செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது. நான் 25 வருடமாக அரசியலுக்கு வருவேன் என கூறி வந்ததாக கூறுகிறார். ஆனால் நான் அதிகாரப்பூர்வமாக அரசியலுக்கு வருவதாக கூறியது 2017 டிசம்பர் 31 ல் கூறினேன். அதற்கு முன்பு நான் கூறி வந்தது அரசியல் முடிவும் ஆண்டவன் கையில் என கூறிவந்தேனே தவிர அரசியலுக்கு வருவேன் என கூறவில்லை.

என் கட்சியில் 60 சதவீதத்தினர் ஓரளவுக்கு படித்தவர்கள், இளைஞர்கள், நல்ல பெயர் பெற்றவர்கள் என 50 வயதுக்குட்பட்டவர்களை இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளேன். மற்றும் சிலர் ஐஏஎஸ், ஐபிஎஸ், வக்கீல் என பலரை நாடி தேடிச்சென்று அரசியலுக்கு வரவழைக்க திட்டமிட்டுள்ளேன்.

முதலமைச்சர் பதவி வேண்டாம் என நான் கூறியதை யாருமே ஏற்கவில்லை. நிர்வாகிகள் பலர் இதனை ஏற்காததையே நான் ஏமாற்றம் என் கூறினேன்.. இவ்வாறு அவர் கூறினார்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news