September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

ரஜினி கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகும் படம் அரசியல் கதைக்களமா ? விவரம் உள்ளே

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கும் காலா படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்திருக்கிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் படத்தை வெளியிட இருக்கிறது.

கபாலி திரைப்படத்திற்கு பிறகு ரஜினியும் ரஞ்சித்தும் இணையும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ள படம் காலா. ரஜினி நடித்துள்ள காலா திரைப்படம் வரும் ஜூன் 7-ம் தேதி பிரமாண்டமாக உலகெங்கும் ரிலீஸ் ஆகிறது.

இந்தப் படத்தை நடிகர் தனுஷ் தயாரித்துள்ளார். அதற்க்கு அடுத்ததாக ஆகஸ்டு மாதம்ரஜினியின் 2.0 வெளியாகும் என்று கூறப்படுகிறது. தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இன்னிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ரஜினி கூட்டணியில் உருவாகும் அடுத்த படத்தை பற்றிய ருசிகர தகவல் ஓன்று வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதியும் பாபி சிம்ஹாவும் சேர்ந்து நடிக்கிறார்கள். அடுத்த வாரம் இறுதியில் ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் படப்பிடிப்புக்கு கிளம்ப தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் அரசியல் சம்பந்தமான கதை என்கின்றனர். இந்த படத்தை முடித்து விட்டு கட்சி பெயரை ரஜினிகாந்த் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தியை அவரது ரசிகர்கள் இணையத்தில்வைரலாக பரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news