September 19, 2018
Inandoutcinema - Tamil cinema news

கடும் கட்டுப்பாடுடன் படப்பிடிப்பு நடந்து வரும் ரஜினி – கார்த்திக் சுப்புராஜ் படம்

ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் காலா ஆகும். கபாலி படத்திற்கு பிறகு ரஜினியும் ரஞ்சித்தும் இணையும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது காலா. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக காலா படம் உலகம் முழுவதும் தற்போது வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இன்னிலையில் கார்த்திக் சுப்புராஜ் படத்திற்க்காக டார்ஜிலிங் சென்றுள்ளார். இமயமலையை சுற்றியே பெரும்பகுதி படப்பிடிப்பையும் நடத்த உள்ளனர்.

இந்திய-பாகிஸ்தான் எல்லையிலும் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் கதையும் கதாபாத்திரமும் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்திலும் வழக்கமான நடிகர் ரஜினிகாந்த் நரைத்த தாடி, மீசை இல்லாமல் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதற்காக தாடி, மீசை, தலைமுடியை அவர் கருப்பாக மாற்றி இருப்பது குறிப்படத்தக்கது. ரஜினிகாந்த் படப்பிடிப்பு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடந்து வருகிறது. சிலர் படப்பிடிப்பை திருட்டுத்தனமாக படம்பிடித்து இணையதளங்களில் வெளியிட்டதால் அவரது தாதா தோற்றங்கள் முன்கூட்டியே தெரிந்து படத்துக்கான எதிர்பார்ப்பை குறைத்தது.

எனவே இந்த படத்தின் தோற்றங்கள் வெளியாகாமல் இருக்க படப்பிடிப்புக்குள் செல்போனுக்கும் ரசிகர்கள் வருவதற்கும் தடை விதித்துள்ளனர். சுற்றிலும் தனியார் பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர். உள்ளூர் போலீசையும் பாதுகாப்புக்கு வைத்து இருக்கிறார்கள். அடையாள அட்டை வைத்துள்ள படக்குழுவினர் மட்டுமே படப்பிடிப்பு அரங்குக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் படத்தை பற்றிய அப்டேட்க்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news