Inandoutcinema - Tamil cinema news

ஆஸ்திரேலியாவில் அதிக வசூல் செய்த படத்தில் காலா எந்த இடம் தெரியுமா ?

ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் காலா ஆகும். கபாலி படத்திற்கு பிறகு ரஜினியும் ரஞ்சித்தும் இணையும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது காலா. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக காலா படம் உலகம் முழுவதும் தற்போது வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் காலா படத்தின் முதல் நாள் வசூல் 15.4 கோடி ரூபாய் மட்டுமே பெற்றது. ரஜினிகாந்தின் முந்தைய படமான கபாலியை விட இது மிகக் குறைவு. கபாலி முதல் நாளில் வசூல் ரூ. 21.5 கோடியாக இருந்தது. காலா படம் மெர்சல் படத்தின் வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ரஜினிகாந்தின் திரைப்படமான ‘காலா’ பைரசி மூலம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுவும் பாக்ஸ் ஆபிஸில் திரைப்படத்தின் வசூலில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என கூறப்படுகிறது. ஐந்து நாட்களில் இந்த படம் சென்னையில் மட்டுமே ரூ. 7.23 கோடி வசூலித்துள்ளது என கூறப்படுகிறது. வர்த்தக அறிக்கையின்படி, காலா வெளிநாட்டு சந்தையில் மிகவும் நன்றாக உள்ளது எனவும் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில், இந்த படம் நான்கு நாட்களில் 2.04 கோடி ரூபாய் வசூலித்து உள்ளது எனவும், ஆஸ்திரேலியாவில் அதிக வசூல் செய்த இரண்டாவது இந்திய படம் காலா என்ற தகவலும் வந்துள்ளது. முதலிடத்தில் பத்மாவதி திரைப்படம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news