September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரள மக்கள் – முதல் உதவிக்கரம் நீட்டிய ரஜினி ரசிகர்கள்

சென்னை: தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு கேரளாவை குறிவைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அம்மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொட்டி தீர்த்த மழையால் 26 ஆண்டுகளாக நிரம்பாத இடுக்கி அணை தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

திருவணந்தபுரம் தொடங்கி மாநிலத்தின் அனைத்து பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகளில் தேசிய பேரிடர் மீட்புகுழு ஈடுபட்டுள்ளது. தமிழகம், கர்நாடக மாநிலங்களும் நிவாரணம் வழங்கியுள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக ரஜினி ரசிகர்கள் உதவிக்கரம் நீட்டி உள்ளனர். பேஸ் புக்கில் இயங்கி வரும் ரஜினி ரசிகர்கள் பக்கம் சார்பில் கேரளாவுக்கு அரிசி, மளிகை பொருட்கள், பெட்ஷிட் உள்ளிட்ட பொருட்கள் வழங்கியுள்ளது. இதனை கேரள முதல் அமைச்சரின் அலுவலக ஒப்புதலோடு வழங்கியுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் பெருமழை பெய்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, மத்திய, மாநில அரசுகளை விடவும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பக்கத்து மாநில மக்கள் தான் பலர் உதவிக்கரம் நீட்டினர். இப்போது கேராளா அதே நிலையில் உள்ளது அவர்களுக்கு ரஜினி ரசிகர்கள் உதவி செய்துள்ளது பாராட்டை பெற்றுள்ளது. இன்னும் பலர் முன்வரம்வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news