பேட்ட படம் ரிலீஸ் – தியேட்டரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் !

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி உள்ளது. இதனால், ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இதில், தாம்பரத்தை சேர்ந்த ஓரு ரஜினி ரசிகர் தனது திருமணத்தையே தியேட்டரில் நடத்தி உள்ளார்.

தாம்பரம் அடுத்த படப்பையை சேர்ந்த தீவிர ரஜினி ரசிகரான அன்பரசு என்பவர் ரஜினி பேட்ட படம் வெளியாவதை முன்னிட்டு தனது திருமனத்தையும் அதே நாளில் நடத்த திட்டமிட்டிருந்தார். அதன்படி, இன்று அதிகாலை மணமக்கள் அன்பரசு மற்றும் காமாட்சி தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடம் சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டருக்கு அதிகலை வந்துள்ளனர்.

பின்னர் தியேட்டர் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் இந்து முறைப்படி அன்பரசு, மீனாட்சி கழுத்தில் தாலியை கட்டினார். அப்போது, தியேட்டர் வளாகத்தில் கூடியிருந்த ரஜினி ரசிகர்கள் ஆரவாரம் செய்து மலர் மூவி வாழ்த்து தெரிவித்தனர்.

இதையடுத்து அனைவருக்கும் திருமண விருந்து வழங்கப்பட்டது. ரஜினிக்காக ரசிகர் ஒருவர் தனது திருமணத்தையே அவரது படம் ரிலீஸில் நடத்தி இருப்பது இதேவே முதல் முறை என்று பேசிக்கொள்ளப்படுகிறது.

இதேபோன்று தஞ்சை மாவட்டத்திலும் ஜோதிராமன், ராணி என்ற மணமக்கள் பேட்ட படம் ரிலீஸ்னை முன்னிட்டு திருமணம் செய்துகொண்டனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news