மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாகும் கருத்தை வெளியிட்ட ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் புதுபடம் ரிலீஸ் ஆவதற்கு முன், அவரது பேட்டி எப்பொழுதும் சர்ச்சைக்கு உள்ளதாகவே அமைகிறது. காலா படத்திற்கு முன்னர் ஸ்டெர்லைட் போராட்டத்திற்காக அவர் சொன்ன கருத்து சர்ச்சையானது.

அதே போல் 2.0 படத்திற்கு முன்னரும் அவர் பத்திரிக்கையாளருக்கு அளித்த பேட்டி சர்ச்சைக்கு உள்ளானது. பேட்ட படம் வரும் பொங்கல் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி சர்ச்சைக்கு உள்ளானது.

கமலை போல நீங்கள் ஏன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை என்ற கேள்விக்கு, நான் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. கட்சி ஆரம்பித்தவுடன் சென்று பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதற்கு பல எதிர்ப்பு குரல்கள் உருவாகியுள்ளன. காஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க அரசியலில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மனிதாபிமானம் இருந்தால் போதும் என்றும் சில பேர் கூறுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் அந்த புயலில் பாதிக்கப்பட்டவர்களில் அவரது ரசிகர்களும்தான் இருக்கின்றனர். ரஜினி அவர்கள் அரசியல்வாதியாக இல்லாமல் ஒரு நடிகனாக பார்க்க சென்றிருக்கலாம் எனவும் சிலர் பேசுகின்றனர்.

ரஜினிகாந்தின் பேட்டிகள் அனைத்தும் சர்ச்சைக்குள்ளதாக மாறுகிறதா? இல்லை அதை சர்ச்சையாக்குகின்றனரா என்ற குழப்பம் அவரது ரசிகர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news