Inandoutcinema - Tamil cinema news

கலைஞரை சந்திக்க சென்னை வரும் நடிகர் ரஜினி – விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக வளம் வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியும், உலகநாயகன் கமல் ஹாசனும் ஆகும். இவர்கள் இருவரும் தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ளனர். இவர்களுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் மற்றும் ஆதரவுகள் இரண்டும் எழுந்து வருவது அனைவரும் அறிந்ததே.

இன்னிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துக்கொண்டிருக்கிறார். இமயமலையை சுற்றியே பெரும்பகுதி படப்பிடிப்பையும் நடத்த உள்ளனர். இந்திய-பாகிஸ்தான் எல்லையிலும் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் கதையும் கதாபாத்திரமும் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது.

இந்த படத்திலும் வழக்கமான நடிகர் ரஜினிகாந்த் நரைத்த தாடி, நரைத்த மீசை இல்லாமல் நடிக்கிறார். இதற்காக தாடி, மீசை, தலைமுடியை அவர் கருப்பாக மாற்றி இருப்பது குறிப்படத்தக்கது. இந்த படத்தில் ரஜினியுடன் நடித்து வருபவர்கள் பட்டியலியை அதிகாரபூர்வமாக அவ்வப்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து வருகிறது.

படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக மீண்டும் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் புறப்பட்டு சென்றார் ரஜினி. அங்கு 2 வாரங்களாக படப்பிடிப்பு நடந்தது. ரஜினிகாந்தும், கதாநாயகியாக வரும் சிம்ரனும் நடிக்கும் காட்சிகளையும் படமாக்கினார்கள். தற்போது டேராடூனில் நடந்த படப்பிடிப்பு முடிந்துள்ளது.

எனவே இன்று அல்லது நாளை ரஜினிகாந்த் சென்னை திரும்பி காவேரி ஆஸ்பத்திரிக்கு சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதன்பிறகு மீண்டும் சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news