இந்த படத்திற்க்காக இதயத்தையும், ஆன்மாவையும் கொடுத்து உழைத்தார்கள் – தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு

இந்த வருடத்தில் தமிழ் சினிமாவின் முக்கியமான படம் என்ற பெயரை ராச்சசன் படம் சம்பாதித்திருக்கிறது. ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு மற்றும் ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் ஸ்ரீதர் தயாரிப்பில், விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் ராம்குமார் இயக்கியிருந்தார். ஜிப்ரான் இசையமைத்திருந்த இந்த படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தின் வெற்றி விழா மற்றும் நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த படம் 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்னிலையில் இது குறித்து தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு கூறியதாவது : ராட்சசன் திரைப்படம் பார்வையாளர்களின் பரவலான கருத்துக்கள் உள்ள நல்ல படத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றது.

இந்த படத்தை பற்றி தொடர்ந்து அவர்கள் பேசுவது, எதிர்காலத்திக் அத்தகைய படங்களை வழங்குவதற்கான பொறுப்பை எனக்குள் செலுத்துகிறது. மேலும், யதேச்சையாக படத்தின் 25ஆம் நாள், இயக்குனர் ராம்குமார் பிறந்த நாளன்று அமைந்தது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இது அவருடைய பிறந்த நாள் பரிசு என்று சொல்வதை விட, அவரது நீண்ட நாளைய கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி.

குழுவில் உள்ள அனைவருமே வெற்றிக்கான மிகுந்த முயற்சியை மேற்கொண்டனர். நடிகர் விஷ்ணு விஷால் ஒரு நட்சத்திரமாக இந்த படத்தின் மூலம் மாறுவது ஒரு தயாரிப்பாளராக எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அமலா பால் ஆகட்டும் அல்லது இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகட்டும் ஒவ்வொருவரும் தங்கள் இதயத்தையும், ஆன்மாவையும் கொடுத்து இந்த படத்துக்காக உழைத்தார்கள் என ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news