September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

சர்ச்சையில் சிக்கிய பியார் ப்ரேமா காதல் திரைப்படம் – விவரம் உள்ளே

ppk

ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம்தான் பியார் ப்ரேமா காதல் ஆகும். இந்த படம் காதல் மாற்றல் நகைச்சுவை கலந்த திரைப்படம் ஆகும்.

இந்த படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் தயாரிப்பாளரும் யுவன் சங்கர் ராஜா எனபது கூடுதல் சிறப்பம்சமாகும். இப்படத்தில் வொய்எஸ்ஆர் பிலிம்ஸ் மற்றும் கே புரொடக்சன்ஸ் ஆகியவற்றின் சார்பில் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் எஸ்.என் ராஜராஜன் ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

பியார் ப்ரேமா காதல் படத்தை புதுமுக இயக்குனரான இளன் இயக்கியுள்ளார். ஒரு புறம் இந்த படத்தை பற்றி நல்ல விதமான விமர்சனங்கள் வெளிவந்தாலும் சில சர்ச்சைகளும் எழுந்து வருகிறது. புதுமுக இயக்குனர் இளன் இயக்கியுள்ள இந்த படம் ஒரு கொரியன் படத்தின் பிரதிதான் என கூறப்படுகிறது.

அதை உறுதிபடுத்தும் விதமாக சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. பின்னர் விசாரித்ததில் இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமே பிரதி என தகவல் வந்துள்ளது. அந்த புகைப்படங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ccv

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news