September 23, 2018
Inandoutcinema - Tamil cinema news

வில்வித்தை மற்றும் இறகு பந்து போட்டியில் தங்கத்தை தவறவிட்ட இந்தியா – விவரம் உள்ளே

18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 10-வது நாளான இன்று நடந்த பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், நம்பர் ஒன் வீராங்கனையான சீன தைபேயின் தாய் ஜூயிங்கை இந்தியாவின் பிவி சிந்து எதிர்கொண்டார்.

மிகுந்த எதிர்பார்ப்பில் நடந்த இந்தப்போட்டியில், 13-21, 16-21 என்ற செட் கணக்கில் பிவி சிந்து தோல்வி அடைந்தார். இதன்மூலம், பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. மற்றொரு ஆட்டத்தில் ஆடவர் வில்வித்தை இறுதி போட்டி நடந்தது.

இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான அபிஷேக் வர்மா, ரஜத் சவுகான் மற்றும் அமன் சைனி ஆகியோர் கொண்ட அணியினர் கொரிய அணியுடன் விளையாடினர். இதில் போட்டியின் இறுதியில் கொரிய அணி எடுத்திருந்த 9 என்ற புள்ளியானது ஆய்வுக்கு பின்10 என திருத்தப்பட்டது. இதனால் இரு அணிகளும் 229-229 என்ற புள்ளி கணக்கில் சமனில் இருந்தது.

இதனை தொடர்ந்து நடந்த ஷூட் ஆஃப் போட்டியில் கொரிய அணி முதலில், மையத்தினை மிக நெருங்கிய வகையில் 10 புள்ளிகளையும், பின்னர் 10, 9 ஆகிய புள்ளிகளையும் எடுத்திருந்தது. இந்திய அணி இரண்டு முறை 10 புள்ளிகள் மற்றும் 9 ஆகிய புள்ளிகளை எடுத்தது.

இதனை தொடர்ந்து ஷூட் ஆஃப் முறையில் வெற்றி பெற்ற கொரிய அணி தங்கம் வென்றது. இந்திய அணிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. மயிரிழையில் தங்கத்தை இந்திய அணி தவறவிட்டதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news