சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் சூரியா நடிக்கும் படம் என்ஜிகே. இப்படத்தில் சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
இந்த படத்தின் படபிடிப்பு சென்னை மற்றும் ஹைதிராபாத் ஆகிய இடங்களில் இரவு பகலாக நடந்து வருகிறது. இப்படத்தை வரும் தீபாவலிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர்.
இந்நிலையில் படபிடிப்பு பணிகள் மற்றும் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் இருப்பதால் குறிப்பிட்ட தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய முடியாது என படத்தின் தயாரிப்பு நிறுவனமான டீரிம் வாரிய பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; படம் சிறப்பாக வர கடுமையாக உழைத்து வருக்கிறோம். படப்பணிகள் நினைத்தை விட அதிகம் உள்ளது. எனவே தீவாளிக்கு பிறகே படம் வெளியாகும். படத்தின் ரிலீஸ் பற்றி விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
#NGK Update! @Suriya_offl @selvaraghavan @prabhu_sr pic.twitter.com/pntfE2KdbN
— DreamWarriorPictures (@DreamWarriorpic) August 30, 2018
ஏற்கெனவே தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் “விஸ்வாசம்” பொங்கலுக்கு தள்ளி சென்றுவிட்டது. இந்நிலையில், என்ஜிகே படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாது என்று தயாரிப்பு நிறுவனமே அறிவித்துள்ளது. இந்த இரண்டு பெரிய படங்களுமே தள்ளிப்போய்விட்டதால் ரசிகள்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.