சூர்யா படத்திற்க்காக ரசிகர்களிடம் வேண்டுகோள்விடுத்த NGK பிரபலம் – விவரம் உள்ளே

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் என்.ஜி.கே ஆகும். இத்திரைப்படம் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகி வருகிறது. டி. ஆர். பிரகாஷ்பாபு மற்றும் டி. ஆர். பிரபு ஆகியோரின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து, ரிலையன்ஸ் என்டர்டெய்மன்ட் வெளியிட உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இயக்குநர் செல்வராகவனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

டிசம்பர் மாத இறுதிக்குள் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்னிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு, என்.ஜி.கே படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் சூர்யா, ரகுல் ப்ரீத்சிங் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதன் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியானது. இதனால் படகுழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து என்.ஜி.கே தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது : ரசிகர்கள் எல்லாரும் சூர்யா அண்ணா மற்றும் என் ஜி கே குறித்து தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்கள் என்பது எங்கள் எல்லாருக்கும் புரிகிறது. உங்களிடம் அளிக்கத்தான் எல்லாவற்றையும் தயார் செய்து கொண்டிருக்கிறோம். படத்தின் வெளியீடு வரை உங்கள் ஆர்வத்தை கட்டுப்படுத்துங்கள். தயவுசெய்து எதையும் லீக் செய்யாதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news