September 23, 2018
Inandoutcinema - Tamil cinema news

ப்ரீதிப்பாவின் மரணத்திற்கு கண்டனம் தெரிவித்த ஜிவி பிரகாஷ் ரஜினி மற்றும் ரஞ்சித். விவரம் உள்ளே

நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால் விழுப்புரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் பிரதீபா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர், கடந்த ஆண்டு நீட் தேர்வில் 155 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருந்தார். அந்த மதிப்பெண்ணைக் கொண்டு தனியார் மருத்துவமனையில்தான் சேருவதற்கான வாய்ப்பு இருந்த நிலையில், பணம் இல்லாத காரணத்தால் அப்போது மருத்துவத்தில் சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னிலையில் இதுபற்றி திரை பிரபலங்கள் பலர் கருத்து கூறியுள்ளனர். இது பற்றி நடிகர் ஜிவி பிரகாஷ் கூறியதாவது : தகுதி பெறுவதற்கான முறையான பயிற்சி அளித்த பின் போட்டிக்கு அளித்திருக்க வேண்டும். என தங்கை அனிதாவும், ப்ரதீபாவும் வஞ்சகமான பாடதிட்டத்தால் தோற்கடிக்கடிக்கப்பட்டனர். பல கனவுகளோடு எம் மாணவர்களின் உயிர்வலி உணர மறுப்பதும் குற்றமே என கூறியுள்ளார்.

இயக்குனர் ரஞ்சித் கூறியதாவது : நீட் மற்றொரு படுகொலையை நிகழ்த்திவிட்டது. கல்வி உரிமை பறிப்பு நம் ஒத்துழைப்புடனே நிகழ்த்துகிறார்கள்.வழக்கம் போல் படிக்க திறன் அற்றவர்கள் சாவதே மேல் என எழுதி தள்ளுவார்கள். யாரிடம் நம் உரிமையை கேட்கிறோம் என்றும் உணராமலே தலைமுறை கனவை அடக்கம் செய்து நகர்வோம்… அடுத்த படுகொலையை நோக்கி என பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கையில், ‘நீட் தேர்வு தோல்வியால் மாணவி உயிரிழந்தது பரிதாபத்திற்கு உரியது. இதனை தடுக்க நாம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவி குடும்பத்துக்கு எனது அனுதாபங்கள் என சென்னை விமானநிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news