Inandoutcinema - Tamil cinema news

பிரபு தேவாவை இயக்கவிருக்கும் பிரபல நடன இயக்குனர் – விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர்தான் ஞானவேல்ராஜா ஆகும். சில்லுன்னு ஒரு காதல், பருத்தி வீரன், சிங்கம், சிறுத்தை, நான் மகான் அல்ல, கொம்பன், பிரியாணி, மாஸ், மெட்ராஸ் உள்பட பல படங்களை தயாரித்தவர், சூர்யா, கார்த்தி ஆகிய இருவரை வைத்தே இவரது தயாரிப்பு நிறுவனம் பெருபான்மை படங்களை தயாரித்து இருக்கிறது.

கடைசியாக இவரது தயாரிப்பில் நடிகர் ஆர்யாவின் கஜினிகாந்த் படம் வெளியாகியது. அடுத்து இவர், பிரபுதேவாவை வைத்து, தேள் என்ற படத்தை தயாரிக்கிறார். தூத்துக்குடி, மதுரை சம்பவம் உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்த பிரபல நடன இயக்குனரான ஹரிகுமார் கதை–திரைக்கதை எழுதி டைரக்டு செய்கிறார்.

பிரபுதேவா மற்றும் ஹரிகுமார் இருவருமே நடன இயக்குனர்களாக இருந்து கதாநாயகன் ஆனவர்கள். படங்களை இயக்கியும் இருக்கிறார்கள். இவர்கள் கூட்டணியில், தேள் படத்தை தயாரிப்பது பற்றி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியதாவது : ஒரு புகழ் பெற்ற நடன இயக்குனரை, இன்னொரு நடன இயக்குனர் இயக்குவது வெறும் எதேச்சையான நிகழ்வு மட்டும் அல்ல.

நடனத்தில் அனுபவம் மிகுந்த இருவரும் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில், உணர்வுப்பூர்வமான ஒரு அதிரடி படத்தை கொடுக்க இருக்கிறார்கள். இது, எங்கள் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு மேலும் பெருமை சேர்க்கும் படமாக இருக்கும் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news