பிரபாஸ் படத்தில் வில்லனாகும் பாலிவுட் ஸ்டார்

சாஹோ படத்தை அடுத்து ராதா கிருஷ்ணகுமார் இயக்கும் தனது 20ஆவது படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த பீரியட் ரொமான்ஸ் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இத்தாலியில் நடைபெற்றது.

இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது. இப்படத்தில் வில்லனாக நடிக்க பல நடிகர்களை பரிசீலித்து வந்த நிலையில், தற்போது பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இதற்கு முன்பு தெலுங்கில் கோபாலா கோபாலா என்ற படத்தில் நடித்துள்ள மிதுன் சக்ரவர்த்திக்கு இது இரண்டாவது தெலுங்கு படமாகும்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news