பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம் ! வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சியில் சில நாள்களுக்கு முன் நிகழ்ந்த பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் புயலாக கிளம்பியுள்ளது .இந்த வன்கொடுமைக்கு எதிராக பலத்தரப்பிடமிருந்து கண்டனம் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. பொள்ளாச்சி பாலியல் வழக்கை சென்னை உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரிக்க வேண்டும் என அந்த தாக்கலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது . இம்மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பொள்ளாச்சி பாலியல் வழக்கை உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரிப்பது குறித்து வருகின்ற ஏப்ரல் 10தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news