Inandoutcinema - Tamil cinema news

இந்த உலக கோப்பையில் வெற்றி பெற்ற முதல் ஆப்பிரிக்க அணி எது தெரியுமா ?

21-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் சுற்றான 2-வது சுற்றுக்கு முன்னேறும். இன்னிலையில் தரவரிசையில் 8–வது இடத்தில் உள்ள போலந்து அணி, 27–வது இடம் வகிக்கும் செனகல் அணியை எதிர்கொண்டது. ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக தொடங்கிய செனகல் வீரர்கள் 37–வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தனர்.

செனகல் வீரர் இட்ரிசா குயே இலக்கை நோக்கி அடித்த ஷாட்டை தடுப்பதற்கு போலந்து கோல் கீப்பர் சிஸ்சினி தயாராக நின்றார். அதற்குள் குறுக்கிட்ட போலந்து வீரர் தியாகோ சியானெக் பந்தை வெளியே தள்ள முயன்ற போது எதிர்பாராத விதமாக அவரது வலது காலில் பந்து பட்டு வலைக்குள் திரும்பி சுயகோலாக மாறியது.

இதனால் முதல் பாதியில் செனகல் 1–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அப்போது தேவையில்லாமல் போலந்து கோல் கீப்பர் சிஸ்சினி நீண்ட தூரத்திற்கு வெளியே வந்து தடுக்க முயல, அவரை சாதுர்யமாக ஏமாற்றிய நியாங் தனிவீரராக முன்னேறி கீப்பர் இன்றி வெறிச்சோடி இருந்த வலைக்குள் பந்தை சுலபமாக அடித்து கோலாக்கினார். இதன் பிறகு 86–வது நிமிடத்தில் போலந்து வீரர் கிரிசோவியாக் ஒரு கோல் திருப்பினார். முடிவில் செனகல் அணி 2–1 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தியது. இந்த உலக கோப்பையில் வெற்றி பெற்ற முதல் ஆப்பிரிக்க அணி செனகல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news