ரியோ ராஜ் நடிக்கும் “பிளான் பண்ணி பண்ணனும்” பட டீசர் இதோ!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளைஞர்களிடம் ஃபேமஸானவர் ரியோ ராஜ். அதில் கிடைத்த புகழை வைத்து சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து இல்லத்தரசிகளிடையேயும் படு பாப்புலர் ஆனார் ரியோ. அதையடுத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியானநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் ஹீரோவாக களமிறங்கினார். ஓரளவிற்கு ஓடி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்ற அப்படத்தை தொடர்ந்து தற்போது இன்னொரு இன்னிங்ஸை துவங்கியுள்ளார் ரியோ.  

பாசிட்டிவ் பிரிண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரோபோ ஷங்கர், சந்தான பாரதி, ஆடுகளம் நரேன், முனீஷ்காந்த், பாஸ்கர் என்று இன்னும் ஏராளமானோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம் மூலம் மூன்றாவது முறையாக பத்ரி வெங்கடேஷ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி உருவாகியுள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் யூடியூபில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news