பேட்ட, விசுவாசம் ரேஸ் ஆரம்பம் – முதல் வெற்றியை பெற்ற தல அஜித்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட மற்றும் தல அஜித் நடிக்கும் விசுவாசம் இரண்டும் வரும் பொங்களுக்கு ரிலீஸ் ஆக இருக்கின்றன. இந்த இரண்டு படங்களின் பாடல்கள் வெளியாகியுள்ளன. பேட்ட இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. ஆனால் விசுவாசத்தின் பாடல்கள் எந்த வித ஆர்பாட்டமும் இல்லாமல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

பேட்ட படத்தில் தீம் மியூஸிக் சேர்த்து  மொத்தம் 11 டிராக் வெளியாகியுள்ளது. அதில் இன்றுவரை அனைவரின் மனதிலும் இடம்பிடித்த பாடல் மரண மாஸ் மட்டுமே.

விசுவாசம் படத்தில் தீம் மியூஸிக் சேர்த்து மொத்தம் 6 டிராக் வெளியாகியுள்ளது. அதில் முதலில் வெளியிட்ட அடிச்சு தூக்கு, வேட்டிக்கட்டு இரண்டையும் ரசிகர்கள் அதிகமாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

இதன்மூலம் பேட்ட படத்தின் பாடல்களை காட்டிலும், விசுவாசம் படத்தின் பாடல்கள் அனைவரையும் அதிகமாக கவர்ந்தது என்றுதான் நம்மை நினைக்கவைக்கிறது. அதன்படி பார்க்கும் பொழுது படம் வெளியாவதற்கு முன்பே பாடல்களில் சூப்பர்ஸ்டாரை வென்றார் தல என்பதே நம் கருத்து.

அதுபோல தல ரசிகர்கள் இணையதளங்களில் பேட்ட வெற்றிக்கு உங்களுக்கு சூப்பர்ஸ்டார் மட்டும் இல்லாமல் விஜய்சேதுபதி, ஹிந்தி மாஸ் ஸ்டார் நவாசுதின் சித்திக் என்று பெரிய நடிகர் நடிகைகளின் கூட்டம் வேண்டும் என்றும், ஆனால் எங்களுக்கு தல மட்டும் போதும் என்றும் மீம்ஸ் உருவாக்கியுள்ளனர்.

இதைவைத்து பார்க்கும் பொழுது பாடல்கள் வெளியீட்டிலேயே தல ரசிகர்களுக்கும், சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கும் இடையே போட்டிகள் ஆரம்பித்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news