“பேட்ட” படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக் – செய்தியாக வெளிடிட்ட டிவிக்கு செம டோஸ் விட்ட கார்த்திக் சுப்பராஜ்

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படம் “பேட்ட”. இப்படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாசுத்தின் சித்திக் உள்பட பலர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.

இப்படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு தற்போது வாரணாசியில் நடந்து வருகிறது. இந்நிலையில், படபிடிப்பு தளத்தில எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சில இணையத்தளத்தில் கசிந்துள்ளது. மேலும், அந்த படங்களை கொண்டு டீவி சேனல்களில் செய்திகளும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதை பார்த்து படத்தின் இயக்குனர் மற்றும் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள் விடுத்திருந்தார். அதில்; ‘படபிடிப்பு தளத்தில் எடுத்து லீக் செய்யும் காட்சிகளையும், புகைப்படங்களையும் இணையத்தில் பகிர வேண்டாம். மேலும், செய்தி சேனல்களே அவற்றை செய்தியாக ஒளிபரப்புவது அதிர்ச்சியாக உள்ளது. அடுத்து அவர்கள் முழுப்படத்தை கூட செய்தி என்ற பெயரில் ஒளிபரப்புவார்களோ என்று என்ன தோன்றுகிறது” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

“பேட்ட” படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்தை பற்றிய அறிவிப்புகள், போஸ்டர்கள் ஒவ்வோன்றாக வெளியிடப்பட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இப்படம் இந்த ஆண்டு இறுதி அல்லது 2019 தொடக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news