பேட்ட- விமர்சனம்

பேட்ட – காளி என்கிற பேட்ட வளவனின் கதை. சீனியர்ஸ் அராஜகம் செய்யும் கல்லூரி விடுதிக்கு காளியான ரஜினிகாந்த் வார்டனாக வருகிறார். அங்கு நடக்கும் தவறுக்கு காரணமான பாபிசிம்ஹாவின் அராஜகத்தை அடக்கி மாணவர்களை தன் பக்கம் இழுக்கிறார். அந்த கல்லூரியில் படிக்கும் அன்வர் மற்றும் மேகா ஆகாஷ் இருவரும் காதலிக்கின்றனர். அதை வெறுக்கும் பாபிசிம்ஹா அவர்களை பிரிக்க நினைக்க காளி காப்பாற்றுகிறார்.

இதனால் காளி மீது அதிகம் கோபப்படும் பாபிசிம்ஹா அவரையும் அன்வரையும் அடிப்பதற்காக ஹாஸ்டலுக்குள் தன் ஆட்களுடன் நுழைகிறார். ஆனால் அங்கு நடப்பது வேறு. பாபிசிம்ஹா இல்லாமல் வேறு ஒரு கும்பல் காளியையும், அன்வரையும் கொலை செய்ய வருகிறது. யார் அந்த கும்பல், காளிக்கும் அன்வருக்கும் என்ன சம்மந்தம். காளி அன்வரை காப்பாற்றினாரா இல்லையா? பேட்டை ஏன் காளியாக நடிக்கிறார் என்ற கேள்விகளுக்கு விடைதான் மீதிக்கதை.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி படம் ஒன்று. அவருக்கே உறிய ஸ்டைலில் பட்டையை கிளப்புகிறார். ரசிகர்கள் ரஜினியிடம் எதை விரும்புகிறார்கள் என்பதை அறிந்து அதற்கு ஏற்றாற்போல் காட்சிகளை அமைத்து இருப்பது பாராட்டுக்குறியது.

வில்லனாக வரும் நவாசுதின் சித்திக். நடிப்பில் கைதேர்ந்தவர். ஆனால் என்னவோ இந்த கதாபாத்திரத்திற்கு ஒட்டாமலே வந்து செல்கிறார். இருந்தாலும் தன் திறமைக்கு ரசிகர்களிடம் கைத்தட்டலை பெற்று இருக்கிறார். அவருக்கு ஏற்ற தீனி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

விஜய் சேதுபதி தன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். படத்தில் ஸ்கிரீன் ஸ்பேஸ் கம்மியாக இருக்கிறது. அதிலும் அவர் தனித்துவமாக தெரிவது அவருக்கே உறிய ஸ்டைல்.

படத்தில் மற்ற கதாபாத்திரங்கள் சிம்ரன், மேகா ஆகாஷ், த்ரிஷா, சசிக்குமார் இயக்குநர் மகேந்திரன், பாபிசிம்ஹா மற்றும் நரேன் அனைவரும் இருக்கிறார்கள்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ரஜினையை ரசித்திருக்கிறார். அவருடைய காட்சிகள் அனைத்துமே படத்திற்கு பலம். ரஜினியின் காட்சிகளில் காண்பித்த கவனத்தை கொஞ்சம் கதையிலும் காண்பித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று நம்மை யோசிக்க வைத்துள்ளது.

படத்தின் சினிமோட்டோகிராபி திருவின் கைவண்ணத்தில் அழகு. படத்திற்கு அடுத்த பலம் அனிருத்தின் மரணமாஸ் பாடலும் பின்னணி இசையும். மற்ற டெக்னிஷ்யன் அனைவரும் ரஜினி படத்திற்காக தங்கள் திறமையை அதிகமாகவே காண்பித்துள்ளனர்.

முதல்பாதியில் இருந்த விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் இரண்டாம் பாதியில் குறைவாகவே இருக்கிறது. படத்தின் நீளம் அதிகமாக இருப்பதால் கூட அப்படி தோன்றுகிறதோ என்கிற எண்ணம் வருகிறது. ரஜினி படம் என்றால் லாஜிக் தேவையில்லை, யார் எப்படி வேண்டுமானாலும் தங்களுடைய கதாபாத்திரத்தின் தன்மையில் இருந்து மாறிக் கொள்ளலாம் என்பதுதான் கொஞ்சம் முகம் சுழிக்கும் படி இருந்தது.

இருந்தாலும் பேட்ட ரஜினி ரசிகர்களை திருப்தி படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  மொத்ததில் பேட்ட காளியாகவே இருந்திருக்கலாம்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news