பேட்ட படத்தின் மரண மாஸ் பாடலை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ் – படக்குழு அதிர்ச்சி

2.0 படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் பேட்ட ஆகும். பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் டிசம்பர் 9-ம் தேதி வெளியாகவுள்ளது.

இதற்கு முன்பாக இன்று ஒரு பாடலும், 7-ம் தேதி ஒரு பாடலும் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது. மரணமாஸ் என்ற தலைப்பில் உருவாகியுள்ள பாடல் இன்று வெளியாகவுள்ளது. இப்பாடல் குத்துப்பாட்டு வகையில் இருக்கும் என்றும், நீண்ட நாட்கள் கழித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இப்பாடலை பாடியிருக்கிறார் என்றும் படக்குழு அறிவித்தது. பேட்ட படத்தில் மரணமாஸ் பாடல் எப்படி உருவானது என்பதற்கான சின்ன வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

இன்று மாலை 6 மணியளவில் மரணமாஸ் பாடல் வெளியாகவுள்ள நிலையில், இப்பாடலை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் வருத்தத்தில் உள்ளனர். இருப்பினும் முழுக்க நாட்டுப்புற வாத்தியக் கலைஞர்களை வைத்து அனிருத் இசையில் உருவான இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news