2.0 படத்துக்கு பிள்ளையார் சுழி போட்டதே கலாநிதிமாறன் தான் – பேட்ட இசை விழாவில் உண்மையை சொன்ன ரஜினி

சென்னை: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி காந்த் நடித்துள்ள பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா, இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநீதிமாறன் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

அவ்வபோது மெத்தனம் உண்டு

பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய்சேதுபதி, நடித்துள்ளார்.  அதுபற்றி அவர் விழாவில் கூறியதாவது; எல்லோரும் கனவு காணுவாங்க, நான் காணத கனவு ஒன்று நிஜமாகி இருக்கிறது. ரஜினி சாருடன் நடித்தது சந்தோஷமாக இருக்கிறது. அந்த கடவுளே அவர் நடிப்பை பார்த்து கைதட்டுவார்.

இப்போ, சினிமா துறைக்குள் நுழைந்த எனக்கு அவ்வபோது மெத்தனம் உண்டு ஆனால், அவர் ஒவ்வொரு முறையும் கேமரா முன்னாடி நிற்கும்போது கோடிக்கணக்கான ரசிகர்கள் முன்னாடி நிற்கிறோம் என்பது போலவே பொறுப்புடன் இருப்பார்.

ஓவ்வொரு காட்சியிலும் அர்பணிப்போடு நடிப்பார். நானும் அந்த நிலைக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவர் கூட நான் நடிச்சது பெரிய விஷயம். என்று அவர் கூறினார்.

பிறந்தநாள் வரப்போகுது

2.0க்கு பிள்ளையார் சுழி போட்டதே கலாநீதிமாறன் தான். ஆனால், 2.0 படத்த தயாரிக்க முடியாமல் போனதால், லைகா புரோடக்‌ஷன்ஸ் தயாரித்தது. திரும்பவும் அவங்க கூட படம் பண்ண நிறைய இயக்குனர்களிடம் கதை கேட்டோம். அப்போ கார்த்திக் ஒரு கதை சொன்னது ஞாபகத்துக்கு வந்துச்சு. கதை கேட்டோம், அதை தயாரிப்பாளரிடம் சொல்ல சொன்னேன். பின்னர் தான் படம் ஓகே ஆச்சு.

கார்த்திக் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து எடுத்தார். விஜய் சேதுபதி சாதாரண நடிகன் இல்லை, அவர் மகா நடிகன். கேள்வி மேல கேள்வி கேட்டு புதுசா யோசிச்சு நடிப்பார். பேச்சு, சிந்தனை, கர்ப்பனை வித்யாசமானது.  ரொம்ப நாளைக்கு அப்பறம் ஒரு நள்ள நடிகன் கூட நடிச்ச அனுபவம். பிளாஷ் பேக் ஈரோயினா திரிஷா நடிச்சு இருந்தாங்க. சிம்ரன் டூயட் பாடும்போது கூச்சமா இருந்தது.

சசிகுமாரின் கேரக்டர் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை சிறப்பாக இருக்கும். நவாசுதின் எது செய்தாலும் வித்யாசமாக செய்வார். சங்கர் பிரம்மாண்டம் என்றால், கார்த்திக் ஸ்டோரி கில்லிங் தான். சிறுவயதில் இருந்தே அனிருத்தை பார்கிறேன். இவனுக்குள் என்னவோ இருக்கு, இவன் பெரிய ஆளா வருவான்னு அப்போவே நினைத்தேன். அனிருத் தான் அடுத்த ஏ.ஆர்.ரஹமான்னு தனுஷ் சொன்னாரு. பிறந்தநாள் வரப்போகுது. ஆனால், நான் இங்கே இருக்க மாட்டேன், தவறா நினைக்க வேண்டாம். பொங்கலுக்கு நல்ல பொழுது போக்கு படமாக பேட்ட படத்தை பாக்க போறிங்க. என்னை நடிக்க வைத்த இயக்குனர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி, என்றார்

விஜய் சொன்னது நிறைவேறிவிட்டது

சின்ன வயசில் இருந்தே என் வாழ்க்கையில் ஒரு பகுதியாக தலைவர் இருந்துள்ளார். சினிமா மீது ஒரு ஆசை, வெறி வந்ததற்கு தலைவர் தான் காரணம். இந்திய சினிமாவிலேயே மனதார பாராட்டுபவர் ரஜினி சார் தான். பீட்சா படத்தை அவர் பாராட்டிய போது படம் பண்ணியதற்கான் பலனை அடைந்துவிட்டேன் என்று நினைத்தேன். தலைவர் லிங்கா படம் நடித்துகொண்டிருந்த சமையத்தில் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் என்ன எழுதினாலும் உங்களை நினைத்து தான் சார் எழுதுவேன் என்றே. அப்போ என்கிட்டையே சொல்லலாமே என்றார். பின்னர், சில மாதங்கள் கழித்து அவரை சந்தித்தபோது ஒரு கதை சொன்னேன்.

பேட்ட சூப்பர் ஸ்டாருக்கான படம் தான். இந்த கதை பண்ணா நான் தான பண்ண முடியும் கண்டிக்காப பண்ணுவோம் என்றார்.  இந்த படத்தில் பாபி தன்னோட கதாபாத்திரத்தை அவரே தேர்வு செய்துகொண்டார். ரஜினிசாரை வைத்து ஒரு படம் பண்ணுவே என்றும் அதின் தான் வில்லனாக நடிப்பென் என்று விஜய் சேதுபதி சொன்னார். அது நிறைவேறி விட்டது. எங்க அப்பா பெரிய ரஜினி ரசிகர் அவரை பார்த்து நானும் ரசிகர் ஆனேன். என்றார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news