7 பேர் விடுதலையை மறைத்த மத்திய அரசை விட்டுவிட்டு, ரஜினிக்கு மீம் போட்டுகொண்டிருக்கிறோம்! அசிங்கப்படவேண்டியது நாமா? அல்லது ரஜினியா?

சென்னை: ராஜிவ்காந்தி கொலை தொடர்பாக சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யக்கோரி ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அவரது கவணத்துக்கு கொண்டு செல்லமால் விட்டுவிட்டது.

இதுபற்றி நேற்று சென்னை விமான நிலையத்தில் நடிகரும், மக்கள் மன்ற இயக்கத்தின் தலைவருமான ரஜினியிடம் செய்தியாளர்கள் அவரது கருத்தை கேட்டனர். அதற்கு ரஜினி “யார் அந்த 7 பேர்” என்று கேட்டார்.  மேலும், அதுபற்றி எனக்கு தெரியாது என்று பதில் அளித்தார்.

ரஜினிகாந்த் கூறிய பதிலை கேட்டு செய்தியாளர்களே ஒரு நிமிடம் அதிர்ந்து போயினர். இதையடுத்து, இணையத்தளத்தில் ரஜினுக்கு எதிராக பலர் கிண்ட அடித்து பதிவிட்டு வருகின்றனர். #யார்அந்த7பேர் என்றும் #ரஜினிக்கு_தெரியாது என்ற ஹேஷ்டேகிலும் பல கருத்துகள், மீம்கள் பகிரப்பட்டு வருகின்றனர்.

இவற்றில் பல அரசியல்வாதிகளின் ஆதரவாளர்களே கொளுத்திபோடும் மீம்கள் என்று பார்க்கும்போதே தெரிகிறது. ஆனால், ரஜினி கூறிய பதிலுக்கு குய்யோ முய்யோ என்று குதிக்கும் நாம்.

ராஜிவ்காந்தில் கொலையில் விடுதலை செய்யக்கோரி ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிடத்தை அவரது கவணத்துக்கே கொண்டு செல்லாமல் முழு பூசிணிக்காயை சோற்றில் மறைத்த மத்திய அரசை மறந்துவிட்டோம். மீடியாக்களும் அதை அப்படியே மன்னில்போட்டு புதைத்துவிட்டன.

இந்நிலையில், ரஜினி கூறிய ஒரு பதிலை மட்டும் வைத்து இன்று இணையம் முழுவதும் விவாதங்கள் நடந்து வருகிறது. ரஜினிகாந்த் எப்போதுமே எதார்த்தவாதி, மனதில் பட்டத்தை சரி, தவறு என்று பார்க்காமல் தெரிந்தோ தெரியாமலோ பேசி விடுவார்.

ஆனால், நாம் பேச வேண்டியது ரஜினியை பற்றியது அல்ல 7 பேரின் விடுதலையில் மத்திய அரசின் நிலையை தான் என்பது பலறும் மறந்துவிட்டு இன்று ரஜினியை கிண்டலடித்து மீம் போட்டுகொண்டிருக்கின்றோம். இப்போது சொல்லுங்கள் அசிங்கப்படவேண்டியது நாமா? அல்லது ரஜினியா?

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news