ஜில்லுவுடும் ஜிகிடி கில்லாடி… ட்ரெண்டிங்கில் பட்டாஸ் பட வீடியோ பாடல்..

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த இப்படத்திற்கு இளம் இரட்டையர்களான விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். அடிமுறை என்னும் தற்காப்பு கலையை மையமாக வைத்து வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ரஜினியின் தர்பார் படத்துடன் மோதிய இப்படம் வசூலில் டீசண்டான கலெக்ஷனை பெற்றிருந்தது. 

இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்று ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் இடம்பிடித்த “ஜில்லுவுடும் ஜிகிடி கில்லாடி” வீடியோ பாடல் யூடியூபில் வெளியாகி ட்ரெண்டிங்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது. ராக்ஸ்டார் அனிருத் பாடியுள்ள இப்பாடலுக்கு இளம் இரட்டையர்களான மெர்வின் – விவேக் இசையமைத்துள்ளனர். 

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news