ஹன்சிகாவின் அடுத்த டார்கெட்! -“பார்ட்னர்”

ஆதியும் மற்றும் ஹன்சிகா முதன்முறையாக இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘பார்ட்னர்.

இந்தப் படத்தை இயக்குனர் மனோஜ் தாமோதரன் என்பவர் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை ஆர்.எப்.சி. கிரியேஷன்ஸ் சார்பாக எஸ்.பி.கோலி தயாரித்து வருகிறார்.

மேலும் படத்தில் புதுமுக நடிகை பாலக் லல்வாணி நடிக்கிறார், இவர் ‘குப்பத்து ராஜா’ படத்தில் ஜீ.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர், விடிவி கணேஷ், ஜான்விஜய், ரவிமரியா, ‘டைகர்’தங்கதுரை ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் மனோஜ் தாமோதரன் கூறியதாவது, ‘பார்ட்னர்’ ஒரு காமெடி கலந்த சயின்ஸ் படமாக இருக்கும் .படத்தில் காமெடிக்கு குறைவே இருக்காது .இந்தத்திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவரும். அந்த வகையில் படத்தின் திரைக்கதை அமைக்கப் பட்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார் .

படத்தில் மிக முக்கிய கேரக்டர்யில் ஹன்சிகாவின் நடித்து இருக்கிறார் . நடிகர் ஆதிக்கும் இப்படம் ஒரு நல்ல திருப்பு முனையாக இருக்கும் .மேலும் ஆதியின் ஜோடியாக நடிக்கும் பாலக் லல்வாணி உள்பட படத்தில் பங்குபெறும் அத்தனை கதாபாத்திரங்களும் பெரிதாகப் பேசப்படும்’’ என்றார். ‘பார்ட்னர்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு சென்னையில் இனிதே துவங்கியது.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news