கடும் சர்ச்சையில் சிக்கிய காஜல் அகர்வாலின் பாரிஸ் பாரிஸ் திரைப்படம்

விகாஸ் பால் இயக்கத்தில், கங்னரானாவத் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் குயின். இந்த படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தை விகாஸ் பாஹ்ல் இயக்கத்தில் பாண்டம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர். 13 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது. இதனை தொடர்ந்து இந்த படம் பல்வேறு மொழிகளில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு வெளியிட்டு தயாராக இருக்கிறது.

இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் என பல மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தை இப்பொழுது தமிழில் பாரிஸ் பாரிஸ் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கங்கனா கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். மனு குமரன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அமித் த்ரிவேதி இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து தயாரிப்பிற்குப்பின் வேலைகள் நடந்து வருகிறது.

இன்னிலையில் தமிழில் உருவான பாரிஸ் பாரிஸ் படத்தின் முன்னோட்ட காணொளி சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் டீஸர் வெளியானது முதல் பல்வேறு சர்ச்ச்சையில் சிக்கியிருக்கிறது. யூடியூப்பிற்கு சென்சார் இல்லாதால், இந்த படத்தின் டீசர் இறுதியில் ஆபாச வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் சில காட்சிகள் முகம் சுளிக்கும் வகையில் சில காட்சிகள் இருக்கிறது. இந்த வசனங்களுக்கும் மற்றும் ஆபாச காட்சிகளுக்கும் பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அந்த காட்சிகளை நீக்க, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Kajal Agarwal Paris Paris Movie Photos HD
Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news