September 24, 2018
Inandoutcinema - Tamil cinema news

நான் இயக்குனரில்லை நான் ஒரு அரசியல்வாதி என பதிலளித்த இயக்குனர் ரஞ்சித். விவரம் உள்ளே

ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கும் ‘காலா’ படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்திருக்கிறார். லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் படத்தை வெளியிட இருக்கிறது. கபாலி திரைப்படத்திற்கு பிறகு ரஜினியும் ரஞ்சித்தும் இணையும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ள படம் காலா. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக காலா இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது.

வெளியானது முதல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை பார்த்த திரை பிரபலங்கள் பலரும் அவரது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இன்னிலையில் நடிகர் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்ராஜ் இயக்கும் அடுத்த படத்தில் நடிப்பதற்காக நேற்று டார்ஜிலிங் புறப்பட்டு சென்றார்.

இன்னிலையில் காலா படத்தின் இயக்குனரான பா.ரஞ்சித், சென்னை சத்தியம் திரையரங்கில் தற்போது பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது : படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது, அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ரஜினிகாந்த் அரசியலுக்காக காலா படம் எடுக்கவில்லை.

முழுக்க முழுக்க மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்காக எடுக்கப்பட்ட படம். அப்போது ஒருவர் நீங்கள் இயக்குநரா ? அரசியல்வாதியா ? என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கு நான் அரசியல்வாதி என இயக்குனர் ரஞ்சித் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news