September 24, 2018
Inandoutcinema - Tamil cinema news

பாலிவுட் நடிகர் அமீர் கானை இயக்குகிறாரா ப.ரஞ்சித் ? விவரம் உள்ளே

தமிழ் திரையுலகில் அட்டகத்தி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் பா.இரஞ்சித் ஆகும். இதனையடுத்து கார்த்தியின் மெட்ராஸ் இயக்கினார். இந்த படம் தமிழ் சினிமாவில் அவருக்கான தனித்த அடையாளத்தை வெளிப்படுத்தியது.

அதை தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்தின் கபாலி படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இம்மூன்று படங்களுமே வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் பா.இரஞ்சித்-ரஜினி கூட்டணியில் உருவான காலா படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தனது வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் மூலம் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார். இப்படமும் சூப்பர் ஹிட்டானது. இன்னிலையில் தற்போது, பா.இரஞ்சித் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானை சந்தித்து கதை சொல்லியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. ஆனால் இது வெறும் வதந்தி என நெருங்கிய திரை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news