சமூக வலைத்தளங்களில் போட்டி இருக்க கூடாது! – ரசிகர்களுக்கு சிம்பு அட்வைஸ்

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், டெனியல் பாலாஜி, ஐஷ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் “வடசென்னை”. இன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் இப்படம் வெளிவந்துள்ளதால் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரும் படத்தை கோண்டாடி வருகின்றனர். படக்குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் நடிகர் சிம்பு வடசென்னை படக்குழுவினருக்கும் நடிகர் தனுஷுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த பதிவில் நடிகர் சிம்பு கூறியிருப்பதாவது “எனது அருமை நண்பர் தனுஷுக்கும், வெற்றிமாறன் மற்றும் வடசென்னை படக்குழுவினருக்கும் என் சார்பாகவும் எனது ரசிகர்கள் சார்பாகவும் மனமாந்த வாழ்த்துக்கள்.

“நமக்குள்ளான போட்டி ஸ்கிரின் முன்பு இருக்க வேண்டுமே தவிற சமூக வலைத்தளங்களில் இருக்க கூடாது”. இந்நிலையில் நல்ல படங்களுக்கு எப்பொது ஆதரவு தரவேண்டும் என்று எனது ரசிகர்களிடம் கேட்டுகொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளர்.

வடசென்னை படத்திற்கான கதையை வெற்றிமாறன் முதலில் உறுவாக்கியபோது அதில் தனுஷ் கேரக்டரில், சிம்புவை நடிக்க வைப்பதாகவே முடிவு செய்யப்பட்டது. அதன்பிறகு ஒரு சில காரணங்களால் சிம்புவை விட்டு படம் கை நழுவி போனது. இதன் பிறகு தான் அந்த வாய்ப்பு தனுஷுக்கு கிடைத்தது. இதுபற்றி நடிகர் தனுஷே அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். இதனால் சிம்பு ரசிகர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் கொதித்து எழுந்தனர். இந்நிலையில், வடசென்னை படக்குழுவினரை வாழ்த்தும் வகையில் அவரது ரசிகர்களுக்கும் அவர் அட்வைஸ் செய்திருக்கிறார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news