மூன்றாவது T20 போட்டியில் இந்திய அணி வெற்றி

நாக்பூரில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. ராகுல் 52 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 62 ரன்களும் சேர்த்தனர்.

தொடர்ந்து ஆடிய வங்கதேச அணியின் முகமது நெய்ம் 81 ரன்களைக் குவித்தார். மிதுன் 27 ரன்கள் சேர்த்த நிலையில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர்.

அபாரமாக பந்துவீசிய சஹார் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, டி20 போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதலாவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இப்போட்டியில் அவர் 7 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இறுதியில் 144 ரன்களுக்கு வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இதன்மூலம் 3போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news