சீதக்காதி படத்தை பற்றி நான் நினைத்தது தவறு – படத்தொகுப்பாளர் ஆர்.கோவிந்தராஜ்

விஜய் சேதுபதி நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவிருக்கும் திரைப்படம்தான் சீதக்காதி. சீதக்காதி படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், பாலாஜி தரணீதரன் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, மௌலி, அர்ச்சனா, சுனில், ராஜ்குமார், பகவதி பெருமாள், மகேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். வரும் 20ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் இந்த படத்துக்கு 96 புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

சரஸ்காந்த் டி.கே. ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்நிலையில் படத்தை பற்றி படத்தொகுப்பாளர் ஆர்.கோவிந்தராஜ் கூறியதாவது : சீதக்காதியின் கதையை இயக்குனர் என்னிடம் கூறியபோது ஒரு உணர்ச்சி மிகுந்த நகைச்சுவை நாடகத்தை அனுபவிக்கும் அனுபவத்தை நான் உணர முடிந்தது. இத்தகைய வகை திரைப்படத்தை எடிட்டிங் செய்வது எளிதான விஷயம், அதிகம் கட் மற்றும் ட்ரான்சிஸன்ஸ் இருக்காது என்ற அனுமானங்களை கொண்டிருந்தேன். ஆனால், நான் எடிட்டிங் செய்ய ஆரம்பித்தவுடன் நான் நினைத்தது தவறு என்பதை படம் நிரூபித்தது.

ஒரு சில காட்சிகள் முற்றிலும் எடிட்டிங்’கை சார்ந்து இருந்தன. எமோஷனை வெளிப்படுத்தும் ஸ்லோ மோஷன் காட்சிகள் மற்றும் நகைச்சுவையை வெளிப்படுத்தும் வேகமான கட்ஸ் செய்ய நிறைய சிரமம் இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, படத்தில் அய்யாவை படம் முழுக்க பயணம் செய்ய வைப்பது எனக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த குழுவுக்கும் மிகுந்த சவாலாக இருந்தது என படத்தொகுப்பாளர் ஆர்.கோவிந்தராஜ் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news