தல 59 படத்திற்கு பூஜை போட்ட படக்குழு. வைரலான புகைப்படம் – விவரம் உள்ளே

வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில், 4வது முறையாக சிவா இயக்கியுள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் முறையாக அஜித் படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். ரஜினி நடித்த பேட்ட படத்துடன் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

தற்போது இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விஸ்வாசம் பணிகளை முடித்துவிட்டதால், வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள பிங்க் தமிழ் ரீமேக்கில் தல அஜித் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விசுவாசம் படத்துக்குப் பிறகு சதுரங்க வேட்டை’ மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தைத்தான் தமிழில் ரீமேக் செய்கின்றனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜித் நடிப்பில் ஏற்கெனவே வெளியான பில்லா, மங்காத்தா மற்றும் ஆரம்பம் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது. பிங்க் படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை. எனவே, இந்தப் படத்திலும் பாடல்கள் இருக்காது என கூறப்படுகிறது.

ஒருவேளை அஜித் ரசிகர்களுக்காகத் தமிழில் சில மாற்றங்களைச் செய்து பாடல்களைச் சேர்க்கவும் வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இன்று அஜித்தின் 59-வது படத்தின் பூஜை நடைபெற்றது. அஜித் சாய்பாபா பக்தர் என்பதால், மற்ற சாமிகள் மத்தியில் சாய் பாபாவும் மற்றும் மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீ தேவியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக அவர் படங்களுக்கு வியாழக்கிழமை தான் பூஜை போடப்படும். ஆனால், இந்தப் படத்துக்கு வெள்ளிக்கிழமை பூஜை போட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news