Inandoutcinema - Tamil cinema news

ஜெயலலிதாவின் வாழ்க்கை படத்தை இயக்கும் ஏ.எல் விஜய். அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்திய அரசியல் களத்தில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தலைவியாக இருந்து, யாருக்கும் அடிபணியாமல் ஆட்சி பீடத்தில் இருந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும். இவர் ஆணாதிக்கம் நிறைந்த அரசியலில் ஒரு பெண் அரசியல்வாதியாக உருவெடுத்தவர். தற்போது அவருடைய வாழ்க்கை படமாக இருக்கிறது.

Vibri மீடியா நிறுவனம் புதிதாக ஒரு தமிழ்ப் படம் ஒன்றைத் தயாரிக்கவுள்ளது. இப்படம் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய படமாகும். தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளதாக அறிவித்திருக்கிறது படக்குழு. தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான விஜய், இப்படத்தை இயக்கவுள்ளார்.

இதில் ஜெயலலிதாவாக நடிக்க இருப்பவர் யார் என்பது முடிவாகவில்லை. ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24, 2019-ல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அன்றைய தினமே படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது. தென்னிந்திய நடிகர்களுடன், பிரபல பாலிவுட் நடிகர்களையும் நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தற்போதே சமூக வலைதளத்தில் ஜெயலலிதாவாக யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பல முன்னணி நாயகிகளின் பெயர்களை வெளியிட்டு வருகிறார்கள். நயன்தாரா, திரிஷா, கீர்த்தி சுரேஷ் இவர்களிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news