September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

சர்க்கார் படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு. விவரம் உள்ளே

நடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ராதாரவி, பழ.கருப்பையா மற்றும் வரலட்சுமி ஆகியோர் நடித்து வருகின்றனர். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ்.

இன்னிலையில் இன்று மாலை சர்க்கார் படம் குறித்த முக்கிய அறிவிப்பினை சன் பிச்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறோம் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் சர்கார் படத்தின் டீசர் அல்லது ட்ரெய்லர் குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அல்லது மெர்சல் படத்தின் பாணியில் சர்க்கார் படத்தின் ஒரு பாடலை மட்டும் வெளியிட திட்டமிட்டு இருக்கலாம் எனவும் கூறப்பட்டது. இன்னிலையில் சில மணித்துளிகள் முன்னதாக சர்க்கார் படத்தின் இசை வெளியிட்டு தேதியை அறிவித்துள்ளது. அக்டோபர் 2 தேதி சர்க்கார் படத்தின் இசை வெளியிட்டு விழா நடக்கும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புகளால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news