Inandoutcinema - Tamil cinema news

ஒரே நாளில் வெளியான தல தளபதி படத்தின் அறிவிப்புகள் – விவரம் உள்ளே

விவேகம் படத்திற்கு அடுத்து தல அஜித் நடிக்கும் திரைப்படம் விசுவாசம். இந்த படத்தை சிவா இயக்க, சத்யஜோதி நிறுவனம் விஸ்வாசம் படத்தை தயாரிக்கிறது. வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் 4 வது முறையாக இயக்குனர் சிவாவுடன் கூட்டணி வைத்துள்ளார் தல அஜீத். இந்த படத்தில் தல அஜீத்க்கு ஜோடியாக நயந்தாரா நடித்து இருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு நடந்த பட உலகினர் வேலை நிறுத்தத்தால் விஸ்வாசம் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு தீபாவளிக்கு அந்த படம் வெளியாகுமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது. ஆனால் விஜயின் சர்கார் படம் தீபாவளிக்கு வருவது உறுதியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

விஜய் அரசியல்வாதிகளுக்கு எதிராக போராடும் கதையம்சத்தில் சர்கார் தயாராகிறது. இந்த நிலையில் சர்கார் படத்தின் டிரெய்லரை அடுத்த மாதம் 13-ந்தேதி விநாயகர் சதுர்த்தியில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். இதே நாளில் விஸ்வாசம் படத்தில் நடிக்கும் அஜித்குமாரின் முதல் தோற்றமும் வெளியாவதாக கூறப்படுகிறது.

இது இருவரது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஸ்வாசம் படத்தில் அஜித்குமார் வடசென்னை தாதாவாக நடிப்பதாக கூறப்படுகிறது. ஒரே நாளில் இந்த இரண்டு பட அறிவிப்புகளும் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news